மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் தோட்ட பகுதியொன்றில் 15 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம்.
குறித்த சம்பவம் தொடர்பாக 32 வயதுதுடைய திருமணமான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி தாத்தா ,பாட்டியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு முதியோருக்கு தெரியாமல் சென்று வந்ததை அவதானித்த அயலவர்கள் இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதை தொடர்ந்து ,சம்பவ இடத்துக்கு சென்று இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை பிரதேச அமைந்துள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது எதிர் வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்ட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
செ.தி.பெருமாள்.மஸ்கெலிய நிருபர்.