கோலாலம்பூருக்கு வெளியே உள்ள மலேசிய புறநகர்ப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
மலேசியாவின் மத்திய சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்கு அருகிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இத் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மூன்று எரிவாயு நிலையங்கள் பாதிக்கப்படவில்லை.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு சிலாங்கூர் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக அருகிலுள்ள வீடுகளில் இருந்த குடியிருப்பாளர்களை தீயணைப்புத் துறை விரைவாக வெளியேற்றியதாகவும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை அவர்கள் தற்காலிகமாக அருகிலுள்ள ஒரு மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.