இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நீர்கொழும்பு போரதோட்டை கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
அதன்படி, கொச்சிக்கடை பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சாரதியான, நீர்கொழும்பு தலுபத பகுதியைச் சேர்ந்த ஜயந்த புஷ்பகுமார என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இச் சம்பவம் குறித்து தற்போது வேறு எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை.
நீதவானின் விசாரணைக்குப் பிறகு, சடலம் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.