மன்னார் நகரில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக திருகோணமலையில் நேற்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் எழுச்சி “கருநிலம்” போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும் வட,கிழக்கு பிரதேசங்களில் நிகழும் திட்டமிடப்பட்ட வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை பிரதான கடற்கரையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“தளம் சூழலியல் குழுமம்” ஒருங்கிணைப்பில் பல்வேறு சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் பல்வேறுபட்ட கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.