பெண் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு செய்தனர்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர், தங்கும் விடுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் காலை 8.00 மணி முதல் 24மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
அதற்கு ஆதரவு தெரிவித்தே இந்த அடையாள பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றது.
