Wednesday, June 11, 2025 5:51 am
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நேற்று செவ்வாய்கிழமை சிறப்பாக இடம் பெற்றது.
பக்த அடியார்கள் காவடி, தூக்குக்காவடி, பாற்செம்பு, கரகம் போன்ற நேர்திக்கடன்களை நிறைவேற்றினார்கள்.
விசேடமாக தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
மந்திகை கண்ணகை அம்மன் ஆலய பொங்கலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

