: டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசிடம் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பத்தாவது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில முதல்வர்களும், யூனியன் பிரதேச முதல்வர்களும், கலந்து கொண்டுள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம். ஆனால் இந்த ஆண்டு கலந்து கொண்டிருக்கிறார். என்னைப் பொருத்தவரை தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்கள் கேட்டு வாங்கி வந்தாலும் அது முதலமைச்சருக்கு பெருமையாகத் தான் இருக்கும்.
அதே நேரத்தில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவு வைத்து தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர் மத்திய அரசுடன் இணக்கமான உறவுகளை வைத்துக்கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
Trending
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
- வேகம் குறையாத ’டியூட்’ – 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
- இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஆண் கைது
- 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் மன்னரின் வைர நகைகள்
- தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 26 லட்சம் விளக்கேற்றி உலக சாதனை