
மதுரையில் நடைபெற்ற கராட்டி,சிலம்பம் ஆகிய போட்டிகலில் முதலிடங்களைப் பெற்ற வடமாகாண மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் இன்று புதன்கிழமை [29]சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள சிவலீமன் சிலம்ப கழக மாணவர்கள், பாபு இஷின் ரியூ கராத்தே பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கிய 20 பேர் கொண்ட மதுரையில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான கராட்டி ,சிலம்பம் போட்டிகளில் பங்குபற்றினர்.
36 முதல் பரிசுகளையும், 8 இரண்டாவது பரிசுகளையும், 5 மூன்றாவது பரிசுகளையும் பெற்றதோடு 95 கேடையங்களையும் பெற்றனர்.