மட்டு/ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
மகாவித்தியாலய அதிபர் திருமதி. சுதாகரி மணிவண்ணன் நிகழ்வுக்கு தலைமையேற்க, பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. K. ஹரிகரராஜ் கலந்து கொண்டார்.
மற்றும் சிறப்பு விருந்தினராக ஏறாவூர் பற்று கோட்டக் கல்வி அதிகாரி திரு. ராஜமோகன், மட்டு/ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் திரு. K. எழில்வேந்தன், ஏறாவூர் கணேஷ காளிகா ஆலய பரிபாலன தலைவர் திரு. P. கஜேந்திரகுமார் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
அழைப்பு விருந்தினர்களாக ஏறாவூர் பற்று- 01 கோட்ட பாடசாலை அதிபர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
மாணவ, மாணவிகள் தம் திறமையை விளையாட்டுகளில் மட்டுமின்றி, மாறுவேடப் போட்டிகளிலும் வெளிக்காட்டினர்.





