மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை [21] மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில்
நடைபெற்றது.
சென்ற வாரம் ஆரம்பமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் A பிரிவில் 7 கழகங்கள் பங்குபற்றி போட்டியிட்டன. இறுதி போட்டிக்கு ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து கெரடாவில் ஐக்கிய விளையாட்டுக்கழகம் விளையாடியது.
நான்கு சுற்றுக்களும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் மூன்று சுற்றுக்களில் வெற்றிபெற்று சம்பியனானது.
B பிரிவில் நடைபெற்ற போட்டியில் 20க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு அச்சுவேலி கலைமகள் அணியை எதிரத்து நாயன்மார்கட்டு பாரதி அணி மோதியது.
மூன்று சுற்றுக்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அச்சுவேலி கலைமகள் விளையாட்டுக்கழகம் மூன்று சுற்றுக்களில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைப் பெற்றது.
இப்போட்டியில் A பிரவில் ஆட்டநாயகனாக இந்து இளைஞர் அணியின் வீரர் சன்சயனும், B பிரிவில் ஆட்ட நாயகனாக அச்சுவேலி கலைமகள் அணயின் சன்யெய்யும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இப்போட்டிக்கு பிரதம விருந்தனராக யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறை கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார்.