Thursday, September 18, 2025 6:37 am
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய செயலாளராக ஜே.எஸ் அருள்ராஜை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க செயலாளராகக் கடமையாற்றும் திருமதி ஜே. ஜே. முரளிதரன் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிக்கிழமை முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திரு. ஜே. எஸ். அருள்ராஜை மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக நியமிக்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இவ் நியமனத்தின் மூலம் குறைந்த வயதில் அரசாங்க இப் பதவியைப் பெறும் பெருமையை திரு ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்.

