மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை விழா படந்த புதன்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணம் கல்வி அமைச்சு செயலாளர் கே.குணநாதன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், சுவாமி விவேகானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பனிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் நடனம், கிராமிய நடனம், சக்தி தாண்டவம், நாட்டுக்கூத்து, பறங்கியர் இசை பாடல்கள் போன்றன இடம்பெற்றது.
