நுஜா ஊடக அமைப்பு, பல பொது அமைப்புகளை முன்னிலைப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது.
நுஜா ஊடக அமைப்பின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் சுயேட்சைக் குழவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
, சுயேட்சைக்குழுவின் ஆலம்குளம் இணைப்பாளரும், எஸ்டோ அமைப்பின் கள உத்தியோகத்தருமான சப்ராஸ் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தார்.
இந்த சுயேட்சைக் குழுவில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், உலமாக்கல், பெண்கள், இளைஞர்கள் என பலரும் போட்டியிடவுள்ளனர்.