கொழும்பு, ப்ளூமெண்டல் – சிறிசந்த செவன மாடி வீட்டுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (18) மாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் 44வயதான நபரொருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.