Saturday, July 26, 2025 8:29 am
இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான 28 வயதுடைய சீன பிரஜை கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 1 ஐபேட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டன. சந்தேக நபர் 52 வயதுடைய சீன பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.

