போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெறும் என்று வத்திக்கான் இன்று அறிவித்துள்ளது.திங்கட்கிழமை அவர் இறந்த பின்னர் அவர் உடல் சவப்பெட்டியில் வைத்திருக்கும் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் போப் பிரான்சிஸை பொதுமக்கள் பார்வையிட கார்டினல்கள் முடிவு செய்துள்ளனர்.
பாரம்பரியத்தை மீறி, போப் பிரான்சிஸ், புனித பீட்டர் பசிலிக்காவிற்கு பதிலாக, ரோமின் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார். இது அவருடைய விருப்பம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.