Sunday, March 1, 2026 2:08 pm
சட்டவிரோத போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துதல்,மறுவாழ்வு ,ம் பொது விழிப்புணர்வு முயற்சிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அரசாங்க ஆதரவுடன் “ஒரு தேசம் ஐக்கியப்பட்டது” பிரசாரத்தின் ஒரு பகுதியாக இலங்கை ஞாயிற்றுக்கிழமை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை அறிமுகப்படுத்தியது.
சட்டவிரோத போதைப்பொருட்களின் விற்பனையை அடக்குதல், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மறுவாழ்வு பெற உதவுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. போதைப்பொருள் நெருக்கடியை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக உரையாடலை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் முயல்கிறது.
இந்த வாரத்தில், அரசு நிறுவனங்கள் , பாடசாலைகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பஸ்கள், முச்சக்கர வண்டிகள் ,பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் போன்ற பொது போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பர பிரசாரங்கள் உட்பட, ஆசிரியர்கள், மாணவர்கள் ,பொதுமக்களை இலக்காகக் கொண்ட புதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

