Saturday, September 20, 2025 7:20 am
பொலிஸ் மாஅதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய சமீபத்தில் 071 – 859 88 88 என்ற வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
