கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
காலி – தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போது பொலிஸ் அதிகாரிகளை நபரொருவர் வாளால் தாக்க முயன்றபோது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
நேற்று ஒரு ரகசிய தகவலுக்கு அமைய சோதனை நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது, அந்த இடத்தில் குடிபோதையில் இருந்த நான்கு பேரில் 31 வயதுடைய ஒருவர், பொலிஸ் அதிகாரிகாரிகளை வாளால் தாக்க முற்பட்ட போது தற்காப்புக்காக பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடாத்தினர்.
காயமடைந்த நபரும் சம்பவத்தில் காயமடைந்த சில காவல் அதிகாரிகளும் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.