பொரளையில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.