பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,விடயம் சார்ந்த விசேட நிபுணத்துவம் கொண்ட 12 நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
பேர வாவியை தூய்மையாக்குவதற்காக இதற்கு முன்னர் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.பேர வாவியில் துர்நாற்றம் வீசுவதற்கும் நீரின் நிறமாற்றத்திற்கும் பாசிகள் அதிகரித்திருப்பதே காரணமென அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு விடயத்துடன் தொடர்புடைய நிபுணர் குழுவின் மூலம் விரைவாக வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமெனவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க மேலும் கூறினார்.
Trending
- கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!