சுற்றுலாத்துறைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த மாதம் வரை 485,102 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் இந்தியாவிலிருந்து 34,006 பேரும் ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும் பிரித்தானியாவில் இருந்து 24,830 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது