இந்தியாவின் மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காகத் ஆரம்பிக்கப்பட்ட “லட்கி பஹின் யோஜனா” திட்டத்தில் பாரிய மோசடியொன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு இந்திய ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,500 இந்திய ரூபாயினை வழங்குகின்றது.
இந்தநிலையில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, 21.44 கோடி இந்திய ரூபாய் உதவித் தொகையைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து குறித்த பணம் வசூலிக்கப்படும் என மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Trending
- சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
- உக்ரைனுக்கு இளவரசர் ஹரி திடீர் விஜயம்
- அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
- மலையக மக்களுக்காக நாமலும் குரல்
- மாகாண சபைகளில் 61,000 இற்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள்
- உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் இலங்கை 15 இடங்கள் முன்னேற்றம்
- 6 அரிய வகை பாம்புகளை கடத்திவந்த இலங்கை பெண் கைது
- அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்