வதிரி பூவறக்ரை பிள்ளையார் ஆலய மஹோற்சவம் 31 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்து 10 நாட்கள் காலையும் மாலையும் விஷேட பூஜை, அபிஷேகம், ஆன்மீகச் சொற்பொழிவு, இறை அர்ப்பணம் என்பன நடைபெறும்.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி வெள்ள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இரதோற்சவம்ம், ஓகஸ்ட் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு புட்கரணியில் தீர்த்தோற்சவமும் நடைபெறும். பிற்பகல் திரு ஊஞ்சல், கொடி இறக்கம், சண்டேஸ்வரர் உற்சவம் ஆகியன நடைபெறும்.
மஹோற்சவகால பிரதமகுரு கணேச பூஜா துரந்தரர் சிவஸ்ரீ கு.கோகுலன் குருக்கள். சாதகாசிரியர்கள் செஞ்சொற்சாதகன் சிவஸ்ரீ மு.சசிதரக் குருக்காள். சிவஸ்ரீ மா. பாலசதாசிவக்குருக்கள். உதவி அர்ச்சகர்கள்
சிவஸ்ரீ லெ.லோஜிதன் ஐயா, சிவஸ்ரீ லோ.பிரசன்னா ஐயா, சிவஸ்ரீ த. எழிலன் ஐயா