வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகில் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு, வடமராட்சி தெற்கு,மேற்கு பிரதேச செயலகங்கள் மற்றும் பண்பாட்டு பேரவைகள் இணைந்து ஏற்பாடுசெய்த 2025ம் ஆண்டிற்கான கலைஞர்கள் ஒன்றுகூடல் கலாசார உத்தியோகத்தர் செல்வி சுகுணா தலமையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆழியவளை தவராசா பகீரதனால் உருவாக்கப்பட்ட சிவந்த கை எனும் பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து V.J நிதர்சனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட வறள் குறும்படம், தாயகம் மீடியாவின் உருவாக்கத்தில் V.J நிதர்சன் எழுதி லின்ரன் இயக்கி தாய் தின்ற பிள்ளைகள் எனும் சுனாமி நினைவு பாடல்ஆகியன திரையிடப்பட்டன. இவற்றின் ஆய்வுரையை ஏகன் மீடியா பிரதம ஆசிரியர் சூரன் ஏ ரவிவர்மா நிகழ்த்தினார்.


