ரோமில் உள்ள விமான நிலையத்திலிருந்து ரியானேர் ஜெட் விமானம் ஜேர்மனிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது பூனையின் மியாவ் சத்தம் கேட்டது. பராமரிப்பு ஊழியர்களை சம்பவ இடத்திற்குச் சென்று போயிங் 737 விமானத்தின் பல பேனல்களை அகற்றிப்பார்த்தபோது பூனை ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. ஊழியர்களுக்குப் போக்குக் காட்டிய பூனை,விமானத்தில் இருந்து வெளியேறாமல் வயர் வழியாக ஓடியது. ஊழியர்கள் அதனை கண்கானித்தனர். இறுதியில் திறந்திருந்த கதவு வழியாக படிக்கட்டில் ஓடி விமானத்தை விட்டு வெளியேறியது.