Monday, September 15, 2025 6:51 am
வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக,தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை கல்வி கற்கின்ற 200 மாணவர்களுக்கு 160,000 ரூப மெறுமதியான சில்வர் உணவுப் பெட்டிகள் வழங்வழங்கப்பட்டுள்ளன.
கல்பிட்டி வீதி, அம்மா தோட்டம், பள்ளிவாசல் துறையில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக கட்டுமானப் பணிகளுக்காக 150,000 ரூபா ஆலய நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டது.
இவ்வுதவிகளை சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமியும், தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

