1960களில் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்தி ஆசிர்வாதம் பெற்ற போது இந்த வேண்டுகோளை விடுத்தார்.
புனித தலத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உடமலுவவுக்குச் சென்றார், அங்கு நுவரகலாவியாவின் தலைமைப் பிக்குவும் தலைமை சங்கநாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய டாக்டர் பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரருடன் ஒரு நல்லுறவு கலந்துரையாடலுக்காக கலந்துரையாடினார்.
1960களில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார்.
இலங்கையில் இந்த புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதியுடன் விவாதிப்பதாக பிரதமர் மோடி கூறியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்த கயாவை ஆன்மீக நகரமாக அபிவிருத்தி செய்யுமாறு வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஜனாதிபதி திசாநாயக்கவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதை நனவாக்குவதற்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்தார்.