மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சத்தை தண்டப்பணம் செலுத்துமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வாகனேரி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்து வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.இதனையடுத்து குறித்த வழக்கு இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்கு தலா ஒருவர் 50 ஆயிரம் ரூபா வீதம் 6 பேரும் 3 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் அதனை செலுத்தாத பட்சத்தில் 3 வருட சிறை தண்டனை என நீதவான் தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.
Trending
- பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுகள் ஏலத்தில் விடப்படும்
- போலி உதைபந்தாட்ட அனியை நாடு கடத்தியது ஜப்பான்
- இந்தியா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான் ஒப்புக்கொண்டது JeM
- வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு காலிஸ்தானி அமைப்பு மிரட்டல்
- ராணி கமிலா, இளவரசி கேட்டை மெலனியா ட்ரம்ப் வணங்கவில்லை?
- மணல் அகழ்வு திட்டத்தால் 12 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு
- உலக தரவரிசையில் இலங்கை பாஸ்போர்ட் 97வது இடத்திற்கு சரிந்தது
- அமெரிக்க காங்கிராஸ் உறுப்பினரைச் சந்தித்தார் இலங்கைத்தூதர்