கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வர வித்தியாலய, பாடசாலை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை 100 இற்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
பாடசாலை வளாகத்தினுள் துப்பாக்கி ரவைகளை, மாணவர்கள் விளையாட்டு பொருளாக பயன்படுத்தியதை அவதானித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் இரகசிய புலனாய்வு துறையினருக்கு அளித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ரவைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.