சுவீடனின் அடையாளமான கிருனா தேவாலயம் செவ்வாய்க்கிழமை (19) தனது புதிய இடத்தை நோக்கிய இரண்டு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக ஆபத்தில் இருந்த 113 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தேவாலயத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
600 தொன் எடையும், 1912 ஆம் ஆண்டுக்கு முந்தைய பழமையான இந்த தேவாலயத்தை புதிய நகர மையத்திற்கு நகர்த்துவதற்காக தொழிலாளர்கள் ஏற்கனவே அதன் அஸ்திவாரங்களிலிருந்து தூக்கி, சிறப்பாக கட்டப்பட்ட டிரெய்லரில் ஏற்றியுள்ளனர்.
மணிக்கு 500 மீ அதிகபட்ச வேகத்தில் பயணிக்கும் இந்தப் பயணம் இரண்டு நாட்கள் திட்டமாகும்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இரும்புத் தாது சுரங்கப் பணிகளின் பின்னணியில் தேவாலயம் அமைந்துள்ள கிருனாவின் பழைய நகர மையம் தாழிறங்கங்ளினால் ஆபத்தில் இருந்தது.
ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 145 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிருனாவில் கட்டிடங்கள் பரவலாக இடமாற்றம் செய்யப்படுவதில் தேவாலயத்தின் இந்த நடவடிக்கை மிகவும் அற்புதமான மற்றும் அடையாள தருணமாகும்.
தேவாலயம் தவிர கிருனாவின் சுமார் 3,000 வீடுகளும் சுமார் 6,000 மக்களும் இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது.

