Thursday, November 6, 2025 3:43 pm
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியில் குறைந்தது 114 பேர் உயிரிழந்து 127 பேர் காணாமல் போனதை அடுத்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பேரிடர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் “தேசிய பேரிடர் நிலை” அறிவிப்பை வெளியிட்டார்.
செவ்வாயன்று நாட்டின் மத்திய மாகாணங்களைத் தாக்கிய கல்மேகி புயல் கரையைக் கடந்தது. இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிகக் கொடிய இயற்கைப் பேரழிவு இதுவாகும்.
2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் செபு மாகாணம், செப்டம்பர் 30 அன்று ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை.

