இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திங்கட்கிழமை [10] வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டார்.
மோடியின் பயணத் திட்டத்தின் முதல் கட்டமாக பிரான்சில் இருப்பார். பரிஸுக்கு சென்ற அவர் எலிசி அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வழங்கும் இரவு விருந்தில் கலந்து கொண்டார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு மோடியும் மக்ரோனும் இணைந்து தலைமை தாங்க உள்ளனர்.
பிரான்சில் தனது பணிகளை முடித்த பிறகு, மோடி நாளை புதன்கிழமை [11] மோடி அமெரிக்காவுக்குச் செல்வார்.ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு மோடியின் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.