பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 3) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, பரிஸில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் 25 வீத விமானங்களை இரத்து செய்யுமாறு பிரான்சின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (DGAC)விமான நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் குறிப்பாகத் தெற்கு பிரான்சில் உள்ள விமான நிலையங்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.