யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக உள்ளூர் கலாச்சார உத்தி யோகத்தராக கடமையாற்றிய பிரபாகரசர்மா சச்சிதானந்தக்குருக்களுக்கு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளூவர் பண்பாட்டு மைய முன்றலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி,வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேத நாய கன்,வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச் சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.