நடிகரும் கராட்டி மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி நீண்ட நாட்களாக புற்றுநோயால் போராடி வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1986 ஆம் ஆண்டு வெளியான “புன்னகை மன்னன்” திரைபடத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் விஜய் நடித்த “ பத்ரி” திரைப்படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராகவும் நடித்திருந்தார்
கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனத்தை ஈர்த்தது.
60 வயதான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சையை கடந்த 22 நாட்களாக பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த இவர் கராத்தே மற்றும் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர். 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.