இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் மூடப்படவுள்ளது.
மேலும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் நடைபெறுகிறது என தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.