பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் இலங்கையில் முன்னணிப் பங்கு வகித்த சுகாதாரச் சேவைகள், மனித வள அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த இந்தத் துறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்திரமணி பாண்டே சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் பிம்ஸ்டெக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி ஏ. சாஜ் யு மெண்டிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவி பணிப்பாளர் பிரார்த்தனா கௌஷலியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை நிறுத்துகிறது ஜாகுவார் லாண்ட் ரோவர்
- எல் சால்வடாருக்கு நாடு கடத்தப்பட்ட மேரிலாந்து நபரை திருப்பி அனுப்ப நீதிபதி உத்தரவு
- அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி
- தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் பூர்த்தி
- 700 கிலோ ஹெரோய்ன் கடலில் பறிமுதல்
- மியான்மருக்கு விரைந்த இலங்கைப்படை
- இந்தியாவுடனான ETCA-வை ரணில் ஆதரிக்கிறார்
- சம்பூர் சூரிய சக்தி திட்டம் மெய்நிகரில் ஆரம்பம்