பிரபல பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் கிறிக்கெற் பிக் மச் சீசனுக்காக பாதுகாப்பு பொறிமுறையை பொலிஸார் மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கொழும்பில் உள்ள பல முன்னணிபாடசாலைகளுக்கிடையில் 15க்கும் மேற்பட்ட பெரிய போட்டிகள் நடைபெற உள்ளதால், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பாடசாலை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர் உட்பட பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், சீசன் காலத்தில் தடையின்றிப் பரவும் சட்டவிரோத போதைப்பொருட்களைத் தடுக்கவும் இந்த அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெரிய போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் மைதானங்களைச் சுற்றிலும், சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணித்து, குற்றவாளிகளைக் கைது செய்ய, கணிசமான எண்ணிக்கையிலான பொலிஸார் சிவில் உடையில் நிறுத்தப்படுவார்கள்.
இதற்கிடையில், வழக்கமான பயணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் வாகன போக்குவரத்தை சீராக பராமரிக்க, இந்த முன்னணி கிரிக்கெட் மைதானங்களுக்கு வெளியே பல நூறு போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்படுவார்கள். இந்தக் காலகட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு