அதிக எதிர்பார்ப்புக்குள்ளான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பொஸ் தமிழ் சீசன் 9 எதிர்வரும் அக்டோபர் 5,ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, முதல் சீசனில் இருந்து வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதியே மீண்டும் செயல்பட உள்ளார்.
இந்தியாவின் சின்னத்திரைகளில் அதிகம் பேசப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பொஸ், இந்த சீசனில் என்னென்ன புதிய திருப்பங்கள், புதுமையான சவால்கள் , எதிர்பாராத போட்டியாளர்களைக் களமிறக்கப் போகிறது என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முந்தைய சீசன்களைப் போலவே, இந்த சீசனும் 100 நாட்களுக்கும் மேல் நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பு தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களின் பெயர்களைப் போட்டியாளர்களாகக் குறிப்பிட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஒக்டோபர் 5 முதல் வார நாட்களில் இரவு 9:30 மணிக்கும், வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.