Friday, May 2, 2025 8:52 am
ஒரு நாள் சேவை பாஸ்போர்ட் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் 24 மணி நேர சேவை மே 05, 06 ,07 ஆகிய திகதிகளில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
 

