பாராளுமன்ற ஊழியர்களின் மாதாந்திர உணவுக் கட்டணத்தை அதிகரிக்க பாராளுமன்றஅவைக் குழு முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் மாதாந்திர உணவுச் செலவு ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரையும்,
பாராளுமன்ற பொது ஊழியர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ. 1,000 முதல் ரூ. 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பாராளுமன்றத்தில் சுமார் 1,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் மொத்த உணவுச் செலவுகள் 225 உறுப்பினர்களிடையே பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டதாகக் காணப்பட்டது.