புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
03 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சாமர சம்பத் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.