பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அமைதி காத்து வருகிறார். அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை. அரசியல் பேசவும் இல்லை. அமைதியாக இருந்து வருகிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவதாக கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன் பிறகு தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் முன்னோடியாக இருந்தவர் டி. ஜெயக்குமார்தான். கடுமையாக பதிலடி கொடுத்து வந்தார். பாஜக வைக்கும் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் முதல் ஆளாக ஜெயக்குமார்தான் விமர்சிப்பார். ராஜாவாக வலம் வந்த தான் தோற்பதர்கு பாஜக தான் காரணம் என அப்போது அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
அதிலும் அண்ணாமலைக்கு சரிக்கு சரியாக கருத்துக்களை வைத்து வந்தவர் ஜெயக்குமார். ஆனால் திடீரென பாஜகவுடன் கூட்டு வைக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தது கட்சியின் பல சீனியர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதில் ஜெயக்குமாரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் அவர் சைலன்ட்டாகி விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 9ம் திகதிக்குப் பிறகு இப்போததான் மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு போட ஆரம்பித்திருக்கிறார் டி.ஜெயக்குமார்