இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 1999ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மஹால்’ படம் மூலம் நடிகராக திரையுலகுக்கு அறிமுகமானார்.
பின்னர் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் சமுத்திரம், கடல் பூக்கள், மகா நடிகன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடைசியாக கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார்.
மனோஜ் பாரதிராஜா தனது 48 ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி தமிழ்த்திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.