பொத்துவில், பானம பகுதியில் உலாவும் வெள்ளை யானைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த யானைகள், பார்ப்பதற்கு வெண்மையாகக் காட்சியளிப்பது தொடர்பில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
எனினும், பானம பகுதியில் காணப்படும் சேறு மற்றும் மணல், இந்த யானைகளின் உடலில் ஒட்டியிருப்பதன் காரணமாகவே அவை வெள்ளையாகக் காட்சியளிப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு தற்காலிகமான நிகழ்வு எனவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக, வெள்ளை யானைகள் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நிறமிக் குறைபாட்டினால் உருவாகும் அரிதான உயிரினங்கள்.
அவை புனிதமானவையாகவும், அதிஷ்டத்தின் அடையாளங்களாகவும் பல கலாசாரங்களில் மதிக்கப்படுகின்றன.
எனினும், இதன் உண்மை நிலையைப் பொருட்படுத்தாமல், வெள்ளை யானை ஜோடிகளைக் காணும் ஆர்வம், சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பலர் பானம பகுதிக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.