கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் அவரின் உடல் நிலை காரணமாக அவரை நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என விசேட வைத்தியர்கள் சபை தெரிவித்துள்ளது.
