பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் இரயிலைத் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகள் அறிக்கையை வெளியிட்டனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பிராந்தியத்திற்கு சுயாட்சி கோரும் ஒரு தீவிரவாத பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலைப் படை இதற்கு பொறுப்பேற்றுள்ளது.