பாகிஸ்தான் கடந்த மூன்று வாரங்களில் பெய்த பருவமழை , வெள்ளம் காரணமாக அ குறைந்தது 124 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 264 பேர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எட்டு புபேர் பலியானதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு பஞ்சாப் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது, 49 பேர் உயிரிழந்தனர் ,158 பேர் காயமடைந்தனர், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 38 பேர் உயிரிழந்தனர் , 57 பேர் காயமடைந்தனர். தெற்கு சிந்து மாகாணத்தில் 20 பேர் உயிரிழந்தனர் , 40 பேர் காயமடைந்தனர், தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் 16 பேர் உயிரிழந்தனர் , நான்கு பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை பலத்த பருவமழை பெய்யும், இது பெரும்பாலும் பரவலான வெள்ளம், உள்கட்டமைப்பு சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது