பாகிஸ்தானில் குவெட்டாவில் உள்ள எல்லைப்புற பொலிஸ் (FC) தலைமையகத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை ஒரு சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.32 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர் பக்த் முகமது கக்கர், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. வீடுகள் வணிக கட்டிடங்கள் ஆகியவற்றின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டன.
இது குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
காயமடைந்தவர்கள் குவெட்டா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.